தன் வாபசி-க்கான நேரம் இது

இந்தியா வளமானது, ஆனால் இந்தியர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அதை மாற்றுவதற்கான நேரம் இது.

ஒவ்வொரு இந்திய குடும்பமும் இந்தியாவின் பொதுச் செல்வத்தில் ரூ. 50 லட்சம் பங்கை கொண்டுள்ளது. தன் வாபசி-க்கான நேரம் இது - ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1 லட்சம் திரும்ப வழங்குவதால், வறுமை, வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகிய என்றுமுள்ள பிரச்சனைகளை என்றைக்கும் தீர்த்துக்கொள்ள முடியும்.

இது ஒரு தைரியமான யோசனை. பொதுச் செல்வம் என்றால் என்ன, ஏன் நாம் அதை திரும்ப பெற வேண்டும் மற்றும் நாம் ஒன்றிணைந்து எவ்வாறு அதைச் செய்ய முடியும் ஆகியவற்றை விளக்குகிறேன்.

***

நான் ராஜேஷ் ஜெயின் நான் ஒரு அரசியல்வாதி அல்ல. நான் சிக்கல் தீர்க்கும் ஒருவர், ஒரு தொழில் முனைவர். 25 ஆண்டுகளாக, நான் தொழில்நுட்ப உலகில் மில்லியன் கணக்கானோருக்கு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளேன்.

1990-களின் பிற்பகுதியில், உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு இருந்த தகவல் இடைவெளியை நிரப்புவதற்காக இந்தியாவின் முதல் இணைய போர்டல்களை அமைத்தேன். உங்களில் வயது முதிர்ந்த சிலருக்கு அந்த வலைத்தளங்களின் பெயர்கள் நினைவிருக்கலாம் - Samachar.com, Khoj.com, Khel.com மற்றும் Bawarchi.com. இப்போது, பிராண்டுகள் தமது வாடிக்கையாளர்களுடன் ஆழமான இணைப்புகளை உருவாக்க எனது நிறுவனம் உதவுகிறது.

08-இல் எனது வாழ்க்கையின் திசை மாறியது - எனக்கு ஒரு நயி திஷா கிடைத்தது. ஒரு நண்பர் என்னிடம் கேட்ட ஒரு கேள்வியால் இது கிடைத்தது, அதாவது, “ராஜேஷ், உன்னுடைய 3 வயது மகன் வளர்ந்து உன்னிடம் - ‘அப்பா, இந்தியாவில் தவறாக நடந்தவை அனைத்தையும் நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தீர்கள். உங்களுக்கு நேரமும் பணமும் இருந்தன. அதைப் பற்றி நீங்கள் ஏன் எதையும் செய்யவில்லை?’ - என்று கேட்டால், நீ அவனுக்கு என்ன பதில் சொல்வாய்?“ என்பதே அக்கேள்வி. இந்தக் கேள்வி என்னை ஒரு புதிய பயணத்தில் தொடக்கிவிட்டது.

இந்தியாவை மாற்றுவதற்காக அரசியலை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஆராய்வதே எனது தீர்வாக இருந்தது. ஒரு சில மற்றவர்களுடன் சேர்ந்து, 2009-இல் மக்களவைத் தேர்தல் நடப்பதற்குச் சிறிது காலம் முன்பாக, ஃபிரண்ட்ஸ் ஆஃப் பி.ஜே.பி-ஐ நிறுவினேன்.

2011-இல் வலைப்பதிவு அடுத்துவரும் தேர்தல்களில் பி.ஜே.பி சொந்தமாக ஒரு மக்களவைப் பெரும்பான்மையை எவ்வாறு வெல்ல முடியும் என்பது குறித்து விவரிக்கும் ஒரு பொது பிலாக் போஸ்ட்-ஐ எழுதினேன். 2012-இல், நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக எனது சொந்த நிதியைக் கொண்டு ஊடகம், தரவு, பகுப்பாய்வுகள், தன்னார்வ வேலை ஆகிய துறைகளிலுள்ள 100 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தேன். 2014 தேர்தல்களில், பி.ஜே.பி சொந்தமாகப் பெரும்பான்மையைப் பெற்று, மோடி இந்தியாவின் பிரதமராக ஆனார்.

ஆட்சியாளர்கள் மாறினாலும், விதிகள் மாறாமல் இருந்தால், விளைவுகள் மாறாது என்பதை நான் பின்னர் உணர்ந்தேன். 71 ஆண்டுகளாக, 71 ஆண்டுகளாக, 20 அரசாங்கங்கள் மற்றும் 3 தலைமுறை இந்தியர்கள், அரசியல்வாதிகள் நம் முன்னால் நின்று வறுமை, ஊழல் ஆகியவற்றிற்கான தீர்வை முன்வைத்துள்ளனர். ஆனால் சிறிய மாற்றம் ஏற்பட்டது. எப்போதுமுள்ள இந்தப் பிரச்சனைகள் இன்னமும் நம்முடன் இருக்கின்றன. இந்தியாவுக்குத் தேவைப்பட்டது என்னவென்றால் நயி திஷா என்ற ஒரு புதிய மார்க்கம். இந்தச் சிந்தனையிலிருந்து பிறந்ததுதான் தன் வாபசி. தன் வபசி

***

நமது கேள்விகளுக்கு திரும்புவோம். நமது தன் எங்கே? இந்தியாவின் பொதுச் செல்வம் என்றால் என்ன? இது பொது நிலங்களில், கனிமப் படிவுகளில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சொத்துக்களில் உள்ள செல்வமாகும். இந்தச் செல்வத்தில் நாம் அனைவரும் பங்குதாரர்களாக உள்ளோம். இந்தச் செல்வம் வெளிநாட்டு வங்கிகளில் இல்லை, இது இந்தியாவில் உள்ளது - நம்மைச் சுற்றி உள்ளது. இது கருப்புப் பணம் அல்ல, இது நமது பணம். . மற்றும் இந்தச் செல்வத்தின் மதிப்பு எவ்வளவு? ரூ. 1500 லட்சம் கோடி. அதாவது 15-க்குப் பின்னால் 14 பூஜ்ஜியங்கள். இதை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரித்தால் ஒரு குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் வரும்.

இந்தியா வளமானது, இருந்தாலும் இந்தியர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். சராசரியாக ஓர் இந்தியக் குடும்பம் ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்தை விடச் சற்று அதிகம் சம்பாதிக்கிறது - அதாவது ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ 10,000-ஐ விடக் குறைவு. அவர்கள் மிகச் சொற்பமாகவே சேமிக்கிறார்கள். அதைத்தான் நாம் மாற்ற வேண்டும். அதனால்தான் நமது செல்வம் நமக்கு மீண்டும் தேவை.

இந்தச் செல்வமானது அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அவர்கள் நமது செல்வத்தைத் திருடிவிட்டனர் - அவர்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செய்ததைப் போலவே. அவர்கள் வாழ்க்கையின் ஆடம்பரத்தை ஒருமுறை பாருங்கள். அவர்களிடம் அரண்மனை போன்ற வீடுகள் உள்ளன, சௌகரியமாகப் பயணம் செய்கிறார்கள், பெரும் பாதுகாப்பைப் பெற்றிருக்கிறார்கள் - இவற்றுக்கெல்லாம் நாம் செலுத்தும் வரிகளில் இருந்தே பணம் செலுத்தப்படுகிறது.

வாயிற்காவலர்கள் ஜமீந்தார்களாக மாறிவிட்டனர்.

இந்தத் திருட்டை நிறுத்தும் நேரம் இது. நமது செல்வத்தை திரும்பக் கேட்க வேண்டிய நேரம் இது.

இந்த செல்வத்தைத் திரும்பப் பெறுவது என்பது, இதை நமது குடும்பத்திற்காக எவ்வாறு செலவிடுவது என்பதை நாமே தேர்வு செய்யலாம் என்பதாகும்.நாம் என்ன செலவிடுகிறோமோ அதே விற்பனையாளர்களுக்கு வருமானமாகிறது.

நாம் உணவில் செலவிடுகையில், அது விவசாயிகளுக்கான வருமானம் ஆகும். நாங்கள் செலவழிக்கும் தொகை விற்பனையாளர்களுக்கான வருமானம் ஆகும். நாம் பிற பொருட்களிலும் சேவைகளிலும் செலவழிக்கையில், அது வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவுகிறது மற்றும் வேலைகளை உருவாக்குகிறது. பல்வேறு திட்டங்களின் நன்மைகளைப் பெறுகின்ற அரசியல் மற்றும் அதிகார வர்க்க முடிவை எடுப்பதில் விருப்புரிமை ஒழிக்கப்படும் போது, நம்மால் ஊழலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

தன் வாபசி என்பது, வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் ஆகிய மூன்று தீவினைகளையும் அகற்றும் நடைமுறைத் தீர்வாகும். தன் வாபசி ஆனது உலகளாவிய வளமைப் புரட்சியாகும், இது அனைத்து இந்தியர்களுக்கும் நமது அரசியலமைப்பை இயற்றியவர்கள் கொண்டிருந்த - அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் வளமை ஆகியவற்றைப் பாதுகாப்பது என்ற - நோக்கை நிறைவேற்றும். தன் வாபசி தான் - அரசு நமது தலைவராக இல்லாமல், முன்னேற்றத்தில் சக இந்தியர்களைக் கூட்டாளிகளாகக் கொண்டு - நமது சொந்த விதிமுறைகளின்படி நம் வாழ்க்கையை வாழ்வதற்கான உண்மையான சுதந்திரம் ஆகும். தன் வாபசி ஆனது நியாயத்தையும் நீதியையும் பற்றியது. தன் வாபசி ஒவ்வொரு இந்தியருக்குமான உரிமை.

***

ൻ വാപസി എങ്ങനെ പ്രാവര്‍ത്തികമാക്കും? தன் வாபசி-ஐ நாம் எவ்வாறு நிகழ வைப்பது? அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் நமது செல்வத்தைத் திருப்பிப் கொடுக்கப் போவதில்லை. அவர்கள் இந்தச் செல்வத்தைப் பற்றி நம்மிடம் கூறாமல் விட்டதோடு, இன்னும் நம்மிடம் இருந்து திருடிக்கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து நமது செல்வத்தை விடுவிக்க, தன் வாபசி-க்கு மற்றொரு சுதந்திர இயக்கம் தேவை.

இதற்கான முதல் படி, எண்களில் நமது வலிமையைக் காட்டுவதாகும். நாம் அதிக எண்ணிக்கையிலும் ஒற்றுமையாகவும் இருந்தால் மட்டுமே, தன் வாபசி-ஐ நிகழச் செய்யலாம். நாம் நமது கருத்து மற்றும் வாக்கின் ஆற்றலைப் பயன்படுத்தத் தயாராக இருந்தால் மட்டுமே, அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தினரையும் செயல்படுமாறு கட்டாயப்படுத்த முடியும்.

(நமது எண்ணிக்கையை காட்ட, பாராளுமன்றம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் ரூபாயை திருப்பித் தருமாறு அழைக்கும் DhanVapasi.com இல் ஒரு மனுவைத் தொடங்கிவிட்டோம். நான் அதை கையொப்பமிடுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்).

இதுவே தொடக்க புள்ளியாகும். எனது குழு தன் வாபசி மசோதாவைத் தயாரிக்கிறது, அது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் அனுப்பப்படும், எனவே அவர்கள் அதைப் படிக்கலாம், அதைப் பற்றி கலந்துரையாடலாம், விவாதம் செய்து, நிறைவேற்றலாம். ஆனால் அவர்கள் நமது உரத்த குரலைக் கேட்டு, நமது ஒற்றுமையின் ஆற்றலை உணரும் வரை அவ்வாறு செய்யமாட்டார்கள். ஆனால் அவர்கள் நமது உரத்த குரலைக் கேட்டு, நமது ஒற்றுமையின் ஆற்றலை உணரும் வரை அவ்வாறு செய்யமாட்டார்கள்.

***

வளமை நமது பிறப்புரிமை, நாம் அதைப் பெறுவோம் - பெற்றுக்கொள்ள வேண்டும்-.

இப்போதிருந்து ஒரு சில ஆண்டுகளில், “இந்தியாவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று நமக்கு அருகிலுள்ள மற்றும் அன்பானவர்கள் நம்மிடம் கேட்கும்போது, நீங்கள் அவர்களது கண்ணை நேராகப் பார்த்து, “நான் தன் வாபசி-ஐ நிகழச் செய்தேன், நான் நம்மையும் ஒவ்வொரு இந்தியரையும் பணக்காரர் ஆக்கினேன்“ என்று பதிலளிக்கலாம்.

நண்பர்களே இதுவே நாம் செயல்பட வேண்டிய நேரம். இப்போது நமது முறை.

மனுவை DhanVapasi.com இல் கையெழுத்திட்டு, உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் கையொப்பமிட வையுங்கள்.

சிறந்ததொரு நாளையை உருவாக்க இன்றே நாம் செயல்படலாம்.

ஜெய் ஹிந்த்.

உங்கள் ஆதரவை உறுதிமொழியுங்கள்